கொலை கொலையா முந்திரிக்கா
கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் இன்று அழிந்து விட்டன என்றே சொல்லலாம். கிராமத்தில் சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டு உண்டு. விளையாட்டுக்கள் எல்லாம் தினமும் மாலை வேளையில் விளையாடுவார்கள்.
சிறு குழந்தைகள் எல்லாம் கண்ணாம் மூச்சி, ஐஸ்வண்டி, கொழை கொழையா முந்திரிக்கா, இந்த விளையாட்டுக்கள் எல்லாம் முதல் வகுப்பிற்கு செல்லும் குழந்தைகள் விளையாடுவார்கள்.
சிறு குழந்தைகள் எல்லாம் கண்ணாம் மூச்சி, ஐஸ்வண்டி, கொழை கொழையா முந்திரிக்கா, இந்த விளையாட்டுக்கள் எல்லாம் முதல் வகுப்பிற்கு செல்லும் குழந்தைகள் விளையாடுவார்கள்.
கபடி
கொஞ்சம் பெரியவர்கள் எல்லாம் தொட்டு விளையாடுதல், துரத்தி விளையாடுதல், நொங்கு வண்டி, தெள்ளு, கோழிக்குண்டு (குண்டு விளையடுவதில் இழுக்கறது, கீழே மேலே என்ற வகை உண்டு) பட்டம் விடுதல், இடு பந்து, கிட்டிப்புல், கில்லி தாண்டு, தாச்சு மறித்தல், திருடன் போலீஸ் என விளையாடுவார்கள்.
பெண்கள் எல்லாம் அஞ்சாங்கல், நொண்டி, சில்லி, கபடி, வலைப்பந்து, பல்லாங்குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுக்களை பெண்கள் விளையாடுவார்கள்.
பெண்கள் எல்லாம் அஞ்சாங்கல், நொண்டி, சில்லி, கபடி, வலைப்பந்து, பல்லாங்குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுக்களை பெண்கள் விளையாடுவார்கள்.
பல்லாங்குழி
பெரியவர்கள் எல்லாம் நீச்சல், கபடி, கயிர் இழத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் விளையாடுவர்.
இந்த விளையாட்டுக்கள் எல்லாம் நம் கிராமத்து மண்வாசனையுடன் உள்ள விளையாட்டுக்கள். இந்த விளையாட்டுக்களை விளையாடும் போது மனம் அமைதியும் சந்தோசம் மட்டுமே இருக்கும். முக்கியமாக இந்த விளையாட்டுக்கு எல்லாம் பணம் தேவையில்லை. விளையாட்டுக்கு தேவைப்படும் பொருட்கள் எல்லாம் கிராமத்திலேயே கிடைக்கும்.

சில்லி
இன்று இந்த விளையாட்டுக்களை யாரும் விளையாடுவது இல்லை, இந்த விளையாட்டுக்களை எல்லாம் நான் சிறுவனாக இருக்கும் போது ரசித்து ரசித்து விளையாடிக்கொண்டு இருக்கிறேன். இன்று நான் ஊரிற்கு செல்லும் போது இந்த விளையாட்டுக்கள் எல்லாம் யாரும் விளையாடுவது இல்லை. நம் கண் முன்னே இவ்விளையாட்டுக்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன.
படங்கள் உதவி : கூகுள்