அழிவில் கிராமத்து விளையாட்டுக்கள்

Monday, January 18, 2010


 கொலை கொலையா முந்திரிக்கா
கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் இன்று அழிந்து விட்டன என்றே சொல்லலாம். கிராமத்தில் சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டு உண்டு. விளையாட்டுக்கள் எல்லாம் தினமும் மாலை வேளையில் விளையாடுவார்கள்.
சிறு குழந்தைகள் எல்லாம் கண்ணாம் மூச்சி, ஐஸ்வண்டி, கொழை கொழையா முந்திரிக்கா, இந்த விளையாட்டுக்கள் எல்லாம் முதல் வகுப்பிற்கு செல்லும் குழந்தைகள் விளையாடுவார்கள்.

 கபடி
கொஞ்சம் பெரியவர்கள் எல்லாம் தொட்டு விளையாடுதல், துரத்தி விளையாடுதல், நொங்கு வண்டி, தெள்ளு, கோழிக்குண்டு (குண்டு விளையடுவதில் இழுக்கறது, கீழே மேலே என்ற வகை உண்டு) பட்டம் விடுதல், இடு பந்து, கிட்டிப்புல், கில்லி தாண்டு, தாச்சு மறித்தல், திருடன் போலீஸ் என விளையாடுவார்கள்.
பெண்கள் எல்லாம் அஞ்சாங்கல், நொண்டி, சில்லி, கபடி, வலைப்பந்து, பல்லாங்குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுக்களை பெண்கள் விளையாடுவார்கள்.

பல்லாங்குழி
பெரியவர்கள் எல்லாம் நீச்சல், கபடி, கயிர் இழத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் விளையாடுவர்.
இந்த விளையாட்டுக்கள் எல்லாம் நம் கிராமத்து மண்வாசனையுடன் உள்ள விளையாட்டுக்கள். இந்த விளையாட்டுக்களை விளையாடும் போது மனம் அமைதியும் சந்தோசம் மட்டுமே இருக்கும். முக்கியமாக இந்த விளையாட்டுக்கு எல்லாம் பணம் தேவையில்லை. விளையாட்டுக்கு தேவைப்படும் பொருட்கள் எல்லாம் கிராமத்திலேயே கிடைக்கும்.

சில்லி
இன்று இந்த விளையாட்டுக்களை யாரும் விளையாடுவது இல்லை, இந்த விளையாட்டுக்களை எல்லாம் நான் சிறுவனாக இருக்கும் போது ரசித்து ரசித்து விளையாடிக்கொண்டு இருக்கிறேன். இன்று நான் ஊரிற்கு செல்லும் போது இந்த விளையாட்டுக்கள் எல்லாம் யாரும் விளையாடுவது இல்லை. நம் கண் முன்னே இவ்விளையாட்டுக்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன.
படங்கள் உதவி : கூகுள்

32 comments:

ஸாதிகா said...

தங்கள் பதிவு பழைய நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டன.நுங்கு வண்டி போன்றவை என் ஞாபகத்திலேயே மறந்து விட்டவை.இப்போதுள்ள சிறுவர்கள் நெட்டில் மூழ்கி அறிவை விருத்தியாக்குகின்றனர்(?)இனி இவைகளை எல்லாம் ஊடகங்கள்,இதுபோல் பதிவுகள் மூலம்தான் காண இயலும். :-(நிறைய இது போல் பதிவுகள் போடுங்கள் சகோதரரே.

sathishsangkavi.blogspot.com said...

வாங்க ஸாதிகா...

நீங்கள் சொல்வது சரிதான் இப்போது உள்ள சிறுவர்கள் நெட்டில் உலகை தங்கள் கையுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர்.

கிராமத்து நினைவுகளுக்காகவே இப்பதிவு சகோதரி....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்..
நல்ல பதிவு..

sathishsangkavi.blogspot.com said...

வாங்க பட்டாபட்டி...

முதன் முறையாக வந்து இருக்கறீங்க...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த நாள் ஞாபகம் வந்ததே,
நண்பனே.. நண்பனே..நண்பனே

sathishsangkavi.blogspot.com said...

வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி...

//அந்த நாள் ஞாபகம் வந்ததே,
நண்பனே.. நண்பனே..நண்பனே//

நினைவுகள் தான் நமக்கு என்றும் சந்தோசம் நண்பரே...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் மிக்க மகிழ்ச்சியா இருக்கு நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

உங்களை தொடர்வதில் மகிழ்ச்சி

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

காலத்திற்கு உகந்த பதிவு.தொடருங்கள்
அன்புடன்
க.னா.சாந்தி லக்‌ஷ்மன்

ஜீவி said...

'கொலை கொலையா முந்திரிக்கா..' என்ற வரிகளைப் பார்த்ததுமே,
'நரியே, நரியே, ஓடிவா!' என்று உதடுகள் முணுமுணுத்தன. 'கபடி',
'பல்லாங்குழி' சரி; 'சில்லி'யை மட்டும் நான் சிறுவனாய் இருந்த பொழுது,
'பாண்டி' என்று சொல்லுவோம்.

நல்ல பசுமையான நினைவுகள்.

Deepa said...

நல்ல பதிவு. ஆம் இந்த விளையாட்டுக்களையெல்லாம் நானும் விரும்பி விளையாடி இருக்கிறேன். நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும்.

Muruganandan M.K. said...

பழைய நினைவுகளை கிளர்ந்தெழ வைத்த உங்கள் பதிவு அருமையாக இருக்கு.நன்றி

தாராபுரத்தான் said...

பழமையை ஞாபக படுத்த அவசியமான பதிவு.

Jerry Eshananda said...

உண்மைதான்,பதிவு அருமை,புகைப்படங்கள் வெகு நேர்த்தி.

அமுதா said...

நல்ல பதிவு. பழைய நினைவுகள் கிளர்ந்தன. இயலும் விளையாடுக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சிலவற்றை சொல்லிக் கொடுத்துள்ளேன்

மேவி... said...

pombaram - vittutingale sagaa

ஜோதிஜி said...

வெகு நாளைக்குப் பிறகு மண் சார்ந்த பதிவுகளை உங்களை மூலம் ரசிக்க வைத்தமைக்கு நன்றி. இன்னும் இது போன்ற கிராமமும் கிராமம் சார்ந்த அத்தனை விசயங்களையும் பதிவுகளாக கொண்டு வருவீரக்ள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துகள் நண்பரே.

Tech Shankar said...

Thanks dear dude

பனித்துளி சங்கர் said...

கடந்த காலங்களை மீண்டும் கண்முன் கொண்டுவந்திருக்கிறது உங்களின் பதிவு .
அற்புதம் !
பகிர்வுக்கு நன்றி !

பழமைபேசி said...

முதல் படம், மனதைக் கனக்க வெக்குதுங்க....

அன்புடன் மலிக்கா said...

சங்கவி நிஜம்தான் கிராமத்துவிளையாட்டுக்களில் இருந்த ஆனந்தம் தொலைந்துபோய் வருகிறது.

இன்னும் அந்த நாட்கள் அடிநெஞ்சில். அருமையான பதிவு..

Sanjai Gandhi said...

அப்டியே பழைய நினைவுகளுக்குக் கொண்டு போய்ட்டிங்க.. சில விளையாட்டுகள் இங்கே எழுதி இருக்கேன்.. மற்றவையும் எழுதனும்..

அன்புடன் நான் said...

பதிவு மிக அருமை.... படம் நீங்க எடுத்திங்களா??

இனி இது போன்ற காட்சி காண கிடைப்பது சிரமம்.... பாராட்டுக்கள்,

நினைவுகளுடன் -நிகே- said...

உங்கள் பதிவு அருமை
பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்..

goma said...

தாமரைப்பூவே தாமரைப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்போ......
சூப்பர் விளையாட்டு

கல்லா மண்ணா...
தூண் பிடித்து விளையாட்டு...
திருடன் போலீஸ் மந்திரி...

கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

dharshini said...

அருமையான பதிவு..

சசிகுமார் said...

பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சாமக்கோடங்கி said...

பழைய நினைவுகள்.. அழியும்போது மனம் கவலையாக உள்ளது.. என்ன செய்வது காலத்தின் கட்டாயம்..

vidivelli said...

very nice..........
good.........

'பரிவை' சே.குமார் said...

பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்..
நல்ல பதிவு..

Jaleela Kamal said...

பழைய ஞாபகங்கல் அசை போடுது ரொம்ப அருமை

அம்பாளடியாள் said...

தத்துரூபமான புகைப்படத் தொகுப்போடுகூடிய தங்களின்
இத்தகவல் அருமையிலும் அருமை!.......பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்............