நம்ம ஊர் வண்டி.. மாட்டுவண்டி..

Wednesday, March 17, 2010


மாட்டு வண்டி நான் சென்ற முதல் வாகனம் இதுதான். எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் திருவிழாவிற்கு முதன் முதலாக 4 மாத குழந்தையாக இருக்கும் போது சென்றேன் பின்னாளில் எனது அம்மா சொன்னதாக ஞாபகம். எனக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் வாகனம் மாட்டு வண்டியாகத்தான் இருக்கும். இன்றும் மாட்டு வண்டிகள் அழியவில்லை ஆனால் குறைந்து இருக்கின்றது.

பழைய திரைப்படங்களில் மாட்டு வண்டியைப்பற்றிய பாடல்களும், மாட்டு வண்டிகளும் அதிகம் இடம் பெற்று இருக்கும் கிராமத்து படம் என்றால் மாட்டு வண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாட்டு வண்டியைப்பற்றி புகழ் பெற்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன.

முன்காலத்தில் சரக்கு வாகனமாக மக்கள் பய்னபடுத்தியது மாட்டு வண்டியைத்தான் இவ்வண்டியைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் தாத்தா கூறிய தகவல் இன்னும் நன்றாக இருந்தது. அவர் காலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிகம் நடக்குமாம் ஊர் ஊராக சென்று மாட்டு வண்டி ஓட்த்தில் நிறைய பரிசுகள் பெற்று இருக்கிறாாரம் மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்ற இடத்தில் தான் பந்தயத்தை பார்க்க வந்த அவர் மனைவியையும் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். வண்டிக்கு பெயிண்ட் அடித்து அழகாக பராமரித்து வருகிறாராம் இப்ப பட்டணத்துக்கு குடி வந்தாதால் அதெல்லாம் நினைவுகளோடு சரி என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது அந்த காலத்தில் சுற்றுலா என்றால் இவர்களுக்கு பழனிதான் அதிகம் செல்வார்களாம் பழனி செல்லும்போது வீட்டில் உள்ள மாட்டு வண்டியின் மேல் சாக்கு கட்டி விட்டு அதுதான் நிழல் போகும் போது கட்டுச்சோறு செய்து கொண்டு செல்வார்களாம் வரும் போது விறகு பொறுக்கி சில இடங்களில் கல் வைத்து சாப்பாடு செய்து கொள்வார்களாம். பழனி சென்று வர ஐந்து நாட்கள் ஆகுமாம் இவர் திருப்பதிக்கும், ராமேஸ்வரத்துக்கும் மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் சென்று வந்துள்ளேன் என கூறும் போது ஆச்சர்யம் கலந்த இன்பம் அதிகரித்தது.

விஞ்ஞான வளர்ச்சியில் நாம் இன்று ஒரே நாளில் திருப்பதி, ராமேஸ்வரம் சென்று வந்தாலும் மாட்டு வண்டியில் செல்லும் சுகம் தனிதான். நண்பர்களே நீங்கள் உங்கள் கிராமத்திற்கு இன்றும் சென்றால் மாட்டு வண்டியில் உங்கள் குழந்தைகளுடன் கொஞ்ச தூரம் சென்று பாருங்கள் அந்த சுகம் ஒரு தனி சுகமே...

41 comments:

goma said...

சிறுமிப்பருவத்தில் ஆழ்வார்குறிச்சியில் மாட்டுவண்டி பயணம் ஜாலிட்ரிப்
பின் மண்டை சைடில் இடிபடாமல் அமர்ந்திருப்பதும் ஒரு ஜாலியான சங்கடம்

அப்பாவி தங்கமணி said...

அழகா சொன்னீங்க. அது தனி சுகம் தான். பழனிக்கு ஒரு தரம் போனப்ப குதிர வண்டில போனதுதான் என் அனுபவம். மாட்டுவண்டி வாய்ப்பு கெடைக்கல. ஆனா எங்க பாட்டி சொல்லி கேட்டு இருக்கேன். இப்ப கிராமத்துல எல்லாம் கூட மாட்டுவண்டிக அழிஞ்சுட்டு வருது. அநேகமா இன்னும் பத்து பதினஞ்சு வருசத்துல museum ல தான் பாக்கணும்னு நெனைக்கிறேன். அழகான பதிவு

karthik said...

சரியா சொன்னீங்க நண்பரே

உருத்திரா said...

நமக்கும் மாட்டு வண்டிதான் முதல் வாகனம்.எனது தாயாரின் தகப்பனார்,சொந்தப் பாவனைக்கு மா.வண்டி வைத்திருந்தார்,அந்த இரண்டு மாட்டுக்கும் பின்னால அலைந்து,வெயிலில் கலந்து ......அதையே ஒரு பதிவாக்கலாம்

உருத்திரா said...

நமக்கும் மாட்டு வண்டிதான் முதல் வாகனம்.எனது தாயாரின் தகப்பனார்,சொந்தப் பாவனைக்கு மா.வண்டி வைத்திருந்தார்,அந்த இரண்டு மாட்டுக்கும் பின்னால அலைந்து,வெயிலில் கலந்து ......அதையே ஒரு பதிவாக்கலாம்

ஸ்ரீராம். said...

சிறு வயதில் ரயில்வே.ஸ்டேஷன்லேருந்து மாட்டு வண்டில போனதும், பள்ளிப் பருவத்தில் புத்தக மூட்டையை, தாண்டிச் செல்லும் கட்டை வண்டியின் பின்புறம் போட்டு, ஏறி உட்கார்ந்தும், சில சமயம் ஏறாமல் கூட நடந்த நினைவுகளையும் தூண்டி விட்டு விட்டீர்கள்..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மாட்டுவண்டி இது எல்லாம் இப்ப எங்கே இருக்கிறது நண்பரே அனைத்தையும் தெரிந்தே தொலைத்துவிட்டோம் .

DREAMER said...

எனக்கு இந்த பயண அனுபவம் இல்லை. என்றாலும் உங்கள் இடுகையைப் படிக்கும்போது, பயணப்பட்டதுபோல் உணர்ந்தேன்.

-
DREAMER

பட்டாபட்டி.. said...

அந்த அனுபவம், என்னதான் 10 லட்சம் ரூபா கார்ல போனானும் கிடைக்குமா சார்..?

இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப இழக்கிறார்கள்...

சே.குமார் said...

மண் சாலை மாட்டு வண்டி பயணம் என்பது ஒரு சுக அனுபவம்.
அதுவும் பள்ளிக்கூடம் செல்லும்போது மாட்டு வண்டி பின்னால் தொங்கிக் கொண்டு வருவது சுகம்தான்.
அருமையான சுகானுபவம்... வாழ்த்துக்கள்..!

Matangi Mawley said...

naan maattuvandiyil ponathillai.. antha aasai eppozhuthum undu! kuthirai vandi ("taanga"- endru vada indiavil koorappadum kuthirai vandi)- yil pona anubavam undu! aanaal neengal ezhuthiyirukkum vitham mikavum azhagaaga irukkirathu!

காதல் கவி said...

இந்த பதிவு சிறுவயதில் வண்டிக்காரருக்கு தெரியாமல் வண்டியில் தொங்கிக்கொண்டு சென்ற அனுபவத்தை நினைவுகொள்ளச் செய்கிறது. எதிர்காலத்தில் மாட்டுவண்டியை எக்ஸ்பிஷனில் வைப்பார்கள்.கால மாற்றத்தை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

அண்ணாமலை..!! said...

ஆகா..!! கிராமத்து விசயங்களை புட்டு விக்கி..மன்னிக்க..வக்கிறீங்களே..!
எங்க ஊர்லையெல்லாம் இன்னும் மாட்டு வண்டிப் பந்தயம் நடக்குதாக்கும்!!
கிராமத்துக்காரன்-
தலைப்பும் அழகான தலைப்பு!

*இயற்கை ராஜி* said...

nalla pakirvu

அன்புடன் மலிக்கா said...

பள்ளிக்குபோகும்போது. ஒருமுறை
மாட்டுவண்டியில் ஏறிப்பார்த்திருக்கிறேன் அழகான அனுபவம்
அதற்காக அடியும் வாங்கியிருக்கேன் அம்மாவின் அம்மாவிடம்.

Anonymous said...

மாட்டு வண்டியே பத்தி அழகா சொன்னிங்க ...கேள்கும்போதே எனக்கும் போகணம் போல் இருக்கு ,நான் மாட்டு வண்டியில் போனதே இல்லே...இனிமே போனாலும் பாவம் அது தாங்குமா ( நான் கொஞ்சம் குண்டு )..என் ப்ளாக் பார்த்து படிச்சு பதில் எழுதினதுக்கு நன்றி ...

சி. கருணாகரசு said...

பகிர்வும்.... அஎத படங்களும் மிக அருமை!

சி. கருணாகரசு said...

நான் மாட்டு வண்டுயை பயன்படுத்தி இருக்கிறேன்(விவசாயத்திற்காக) அது ஒரு காலம்.

அந்த காலத்தில்... மாட்டு வண்டியில் செனறதால்... அவர்கள், காற்ரை சுவாசித்தார்கள்... நான் நவீனத்தால் புகையை தின்கின்றோம்!

Anonymous said...

நினைத்துப் பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது நண்பரே..ஆனால் மாடுகள் தான் பாவம்..ரொம்ப தூரம் நடந்து களைத்துப் போகும்..

இளம் தூயவன் said...

நல்ல கிராமத்து ரசனை, இன்று எங்கள் ஊரில் மாட்டு வண்டியே இல்லை.

சௌந்தர் said...

மாட்டு வண்டியில் போக எனக்கும் புடிக்கும்.......

ம.தி.சுதா said...

நடடா ராசா சிவலக்காளை நாளை விடியா போகுது.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

ஈரோடு தங்கதுரை said...

நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

தியாவின் பேனா said...

அருமையான கிராமிய மண்மணம்

தியாவின் பேனா said...

nice post

Ananthi said...

ஆமாங்க உண்மையில் அருமையான அனுபவம் தான்...

மாட்டு வண்டியில் செல்வது.. நானும் சென்று இருக்கிறேன்.. :-))

மாடுகளின் கழுத்தில் கட்டி விட்டிருக்கும் மணிகள் சத்தமும், வண்டியின் அசைவும் சுகமான அனுபவம் தான்.. :-))

ஆர்.ராமமூர்த்தி said...

மாட்டு வண்டி அருமை...


அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு!

சின்னஞ்சிறு வயதிலும் அதன் பின் மலரும் இள‌ம் பருவத்திலும் மாட்டு வண்டியில் ஆற்றங்கரையோரமாக பயண‌ம் செய்த மலரும் நினைவுகளை உங்கள் கட்டுரை ஒரே நிமிடத்தில் கொண்டு வந்து விட்டது. 'பனித்துளி சங்கர்' சொன்னது போல இந்த மாதிரி பொக்கிஷங்களையெல்லாம் தெரிந்தே தொலைத்து விட்டோம். இப்போதே நிறைய கிராமங்களில் மாட்டு வண்டிகள் முற்றிலுமே அழிந்து விட்டன.

மாணவன் said...

யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் மாட்டுவண்டியைப் பற்றி அருமையாக பதிவு செய்துள்ளீர்கல் சூப்பர்...

//அந்த அனுபவம், என்னதான் 10 லட்சம் ரூபா கார்ல போனானும் கிடைக்குமா சார்..?//

அதே அதேதான் அந்த சுகமே தனிதான்

படத்தைப் பார்த்தவுடன் எனது ஊர் ஞாபகம் வந்துவிட்டது நண்பா ...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பணி

asiya omar said...

மாட்டு வண்டியில் தான் எட்டாவது வகுப்பு வரை பள்ளிக்கு சென்று வந்தோம்,இன்னமும் வீட்டில் மாட்டுத்தொழுவம் உண்டு ஆனால் மாடுகளும் வண்டியும் இல்லை,முன்னாடி வண்டிக்காரர் கிட்டே (கோசுப்பெட்டி)இருக்கவும்,பின்னே காலை தொங்கப்போட்டு இருக்கவும் ரொம்ப பிடிக்கும்.அருமையான சகோ.இன்று தான் என் கண்ணில் இந்த இடுகை படுகிறது,தொடர்ந்து கிராமம் பற்றி எழுதுங்க.

பால்ராஜ் said...

அன்பு நண்பா என்னைப்போல்
உங்கள் ரசனையும்
வாழ்த்துக்கள் !
நானும்
கிராமத்துக்காரன்தான்.

ஜெ.ஜெ said...

விஞ்ஞான வளர்ச்சியில் நாம் இன்று ஒரே நாளில் திருப்பதி, ராமேஸ்வரம் சென்று வந்தாலும் மாட்டு வண்டியில் செல்லும் சுகம் தனிதான்..///////

உண்மை...

நண்பர்களே நீங்கள் உங்கள் கிராமத்திற்கு இன்றும் சென்றால் மாட்டு வண்டியில் உங்கள் குழந்தைகளுடன் கொஞ்ச தூரம் சென்று பாருங்கள் அந்த சுகம் ஒரு தனி சுகமே.../////

எங்கள் கிராமத்தில் இப்பொழுதே மாட்டு வண்டிகள் பார்ப்பது அபூர்வமாகி விட்டது.. வரப்போகும் காலஙகளில் கிராமங்களே காணாமல் போய்விடும் போலிருக்கே..

malathi in sinthanaikal said...

சரியா சொன்னீங்க

"நந்தலாலா இணைய இதழ்" said...

அருமை!!

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

இராஜராஜேஸ்வரி said...

பாரப்பா பழனியப்பா -பாட்டு ஞாபகம் வருகிறது.

dhanasekaran .S said...

அருமையான பதிவு அழகான நினைவுகள்.

Anonymous said...

superaaa sonninga ...

VijiParthiban said...

ஆமாம் உண்மை தான் நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நம்முடைய பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும் ... எங்கள் வீட்டில் இன்னும் வண்டி இருக்கு ....... ஆனால் மாடுதான் இல்லை...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அருமையான பதிவு அழகான நினைவுகள்.

Robert said...

ஆமாம். மாட்டு வண்டி வைத்திருப்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்தது. வைக்கோல் அடியில் வைத்து அதன் மேல் ஜமக்காளம் விரித்து ஊருக்கு செல்வது சிறுவயதில். அந்த பயணங்கள் ஒரு மறக்கவியலாத அனுபவங்கள்தான்.. அருமை.